இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன் யூடியூப் தளத்தில் தெரிவித்தார்.
செல்வக்குமார் கூறியதாவது, வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகம் இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும். இதனால், பொதுமக்கள் மற்றும் பிராந்திய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும், இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் கடலோர நகரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
நவம்பர் மாதக் கடைசியில் வந்த புயலையும் செல்வக்குமார், முன்னறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
