அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்!

Date:

அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மொழிபெயர்ப்பாளர் சேவையில் நிலவும் சம்பளப் பிரச்சினை, தரங்களுக்கு இடையிலான சம்பள முரண்பாடுகள் மற்றும் வெற்றிடங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

கடந்த கால அரசாங்கங்கள் அரச சேவையின் சம்பள உயர்வுகளை முறையான அல்லது தர்க்கரீதியான வழிமுறைகளின்றி மேற்கொண்டதன் காரணமாகவே இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்றும், சம்பள முரண்பாடுகள் குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஆண்டில் இதற்கான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...