இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

Date:

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த கிறிஸ்மஸ் தினத்தில் உறுதிபூணுவோமென, பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் பிறந்தவுடனேயே கிறிஸ்தவ பக்தர்கள் உன்னதமான கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகிறார்கள். அமைதியின் செய்தியுடன் பாலன் இயேசு பிறந்த செய்தி பெத்லகேம் நகரிலிருந்து உலகிற்கு அறிவிக்கப்பட்ட அந்த நத்தாரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது கிறிஸ்தவர்களின் அபிலாஷையாகும்.

இருப்பினும், இம்முறை குளிர்ந்த டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சியுடனோ அல்லது உற்சாகத்துடனோ பிறக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது சகோதர மக்களின் துயரம் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே இது பிறந்துள்ளது.

ஆயினும், நத்தாரின் உண்மையான அர்த்தத்தை முன்னிறுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழிகாட்டல்களுக்கு அமைய, எமது நாட்டு மக்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையுடனும் கூட்டுப்பொறுப்புடனும் பாதிக்கப்பட்ட தமது சகோதர மக்களுக்காக முன்வந்தனர். இது அன்பு, சகவாழ்வு மற்றும் இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.

நாட்டை வழமைக்குக் கொண்டுவருவதற்காக அனைத்து மக்களும் ஒரே நோக்கத்துடனும், கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைய வேண்டிய தருணத்திற்கு நாம் இப்போது வந்துள்ளோம்.

உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகள் எந்த வகையிலும் சிதைந்துவிட இடமளிக்காது, அவர்கள் எதிர்பார்க்கும் “புதியதோர் நாட்டை” கட்டியெழுப்பும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

சிறந்ததொரு நாளை நோக்கிய எமது அனைவரினதும் கனவு நனவாக, பிரஜைகளாக ஒன்றிணைந்து, அன்பு, சகவாழ்வு மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்பட இந்த நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் எனது இனிய நத்தார்  தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சேருநுவர பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 14 பேர் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில்...

டிசம்பர் 26 தேசிய பாதுகாப்பு தினம்: உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 31,000...

தேசமாக ஒன்றிணைந்து, தைரியத்துடனும் ஒற்றுமையுடனும் சவால்களை எதிர்கொள்வோம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி.

ஜனாதிபதி அநுர குமாரவின்  கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தி.. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ பக்தர்கள்...

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில்...