இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உச்சபட்ச ஆதரவை வழங்குவோம் – மாலைத்தீவு ஜனாதிபதி உறுதி

Date:

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட பெரும் அனர்த்த நிலைமை குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு (Dr Mohamed Muizzu) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திலும் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் மாலைத்தீவு ஜனாதிபதி அறிவித்தார்.

நேற்று (டிசம்பர் 04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய மாலைத்தீவு  ஜனாதிபதி, இந்த கடினமான நேரத்தில் மாலைத்தீவு அரசாங்கமும் மக்களும் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் துணை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமது சகோதர நாடான இலங்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தப் போவதில்லை என்றும் கலாநிதி மொஹமட் முய்ஸு வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கடினமான தருணத்திலும் மாலைத்தீவு இலங்கைக்கு வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சந்தர்ப்பத்திலும் மாலைத்தீவுஅரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கும் உள்ளார்ந்த ஆதரவு ஒரு பெரும் பலம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் முன்னெடுப்பு

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களான...

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

அவசரகால பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 3.9 மில்லியன் மின்சார நுகர்வோரில்,...

பாராளுமன்ற உறுப்பினராக மொஹமட் தாஹிர் பதவியேற்பு!

நைனாதம்பி மரிக்கார் முகமது தாஹிர் இன்று (05) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன...