சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

Date:

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய, இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி கலந்து கொண்டார் .

அனர்த்தத்தால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை முறையான வழிமுறையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீண்டும் இதுபோன்ற பேரழிவால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, அதற்காக துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஜந்தர் மந்தருக்கு மீண்டும் உயிர் ஊட்டிய ராகுல் காந்தி: மோடி இல்ல வீதியை முற்றுகையிட்டுப் போராட்டம்!

யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும்...

இலங்கையின் கல்வி எதிர்காலத்திற்காக கைக்கோர்க்கும் ‘சம் சம் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘முஸ்லிம் ஹேண்ட்ஸ்’ அமைப்புக்கள்!

இலங்கையின் கல்வித் துறையை மேம்படுத்துவதையும், பரஸ்பர ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதையும் நோக்கமாகக்...

கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பிற்காக பேராசிரியர் பரீனா ருஸைக்கிற்கு ‘தமிழன்’ விருது!

அறிவை விதைத்து ஆராய்ச்சியை வளர்த்து சமூக முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு உயர்கல்வித் துறையில்...

மாவனல்லை IIMT வளாகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் M.M.M. நஜீம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மாவனல்லை IIMT வளாகத்தின் (IIMT Campus, Mawanella) புதிய உபவேந்தராகப் பேராசிரியர்...