இலங்கையின் கல்வி எதிர்காலத்திற்காக கைக்கோர்க்கும் ‘சம் சம் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘முஸ்லிம் ஹேண்ட்ஸ்’ அமைப்புக்கள்!

Date:

இலங்கையின் கல்வித் துறையை மேம்படுத்துவதையும், பரஸ்பர ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு, சம் சம் ஃபவுண்டேஷன் (Zam Zam Foundation) மற்றும் முஸ்லிம் ஹேண்ட்ஸ் (Muslim Hands) ஆகிய அமைப்புகளுக்கிடையில் உயர்மட்ட வியூகக் கலந்தரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

கடந்த ஒரு ஆண்டாக இரு அமைப்புகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியாகவே இச்சந்திப்பு அமைந்தது. இரு அமைப்புகளும் தங்களது அடுத்த 5 ஆண்டுகளுக்கான வியூகத் திட்டங்களை (Five-year strategic plans) இறுதி செய்து வரும் இக்காலக்கட்டத்தில் இக்கலந்தரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.

முறைசார், முறைசாரா மற்றும் ஒழுங்கமைக்கப்படாத கல்விகளை உள்ளடக்கிய பரந்த கல்வித்துறையில் நீண்டகாலக் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்து இரு அமைப்புகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் இதன்போது விரிவாக ஆராய்ந்தனர்.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் தேசிய கல்வி முன்னுரிமைகளுக்கு ஏற்ப எதிர்காலத் திட்டங்களை வகுத்தல்.

தரமான கற்றல் வாய்ப்புகளை நாட்டின் அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் சமமாக விரிவாக்குதல் மற்றும் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்துதல்.

மாணவர்களின் கற்றல் பேறுகளை அதிகரித்தல், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்துதல்.

புதுமையான மற்றும் நிலையான கூட்டாண்மை மாதிரிகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான கல்வி அமைப்பை உருவாக்குதல்.

இந்நிகழ்வில் முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் சாஹித் அசீம் (Mr. Zahid Aseem), இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளர் முஹம்மத் மிஹ்லார் (Mr. Mohamed Mihlar), சம் சம்  பவுண்டேஷன் தலைவர் முப்தி யூசுஃப் ஹனிஃபா (Mufthi Yoosuf Haniffa) ஆகியோர் உட்பட இரு அமைப்புகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும், முஸ்லிம் ஹேண்ட்ஸ் அமைப்பின் அறங்காவலர்களான திரு. மொஹிதீன் நைஸர் காதர், டொக்டர் அஸ்வர் அஸாஹிம் மற்றும் டொக்டர் முஹம்மத் மிஹ்லார் ஆகியோர் கலந்துகொண்டு, இலங்கையில் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நிறுவன ரீதியான உத்திகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இலங்கையின் நீண்டகால சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையிலும், வலுவான மற்றும் நிலையான கல்விச் சூழலை உருவாக்கும் வகையிலும் ஒன்றிணைந்து செயல்பட இரு அமைப்புகளும் இதன்போது உறுதியேற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பிற்காக பேராசிரியர் பரீனா ருஸைக்கிற்கு ‘தமிழன்’ விருது!

அறிவை விதைத்து ஆராய்ச்சியை வளர்த்து சமூக முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு உயர்கல்வித் துறையில்...

மாவனல்லை IIMT வளாகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் M.M.M. நஜீம் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மாவனல்லை IIMT வளாகத்தின் (IIMT Campus, Mawanella) புதிய உபவேந்தராகப் பேராசிரியர்...

நெல்சன் மண்டேலா தினம்: மட்டக்குளி கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் விசேட திட்டம்!

சர்வதேச நெல்சன் மண்டேலா தினத்தை முன்னிட்டு, கொழும்பு மட்டக்குளி  காக்கைத் தீவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...