நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

Date:

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை  பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்தமை மற்றும் இடையூறு விளைவித்தமை தொடர்பான வழக்கு ஒன்றில் நேற்று (23) நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காகவே அவர் மீது இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு...

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார் சிறிது...