பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Date:

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத் அன்வர் சௌத்ரி  இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் மொஹமட் ஜுனைத் இன்று செவ்வாய்க்கிழமை (09) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இலங்கை-பாகிஸ்தான் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நட்புறவைக் கொண்டுள்ள நாடு, இலங்கை ஊடகவியலாளர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு வருகைத்தருமாறு அழைப்பு விடுத்தார்.

அத்துடன் கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட போரிடரினால் இலங்கைக்கு பாகிஸ்தான் உடனடி நிவாரணங்களை உடன் வழங்கியது. பாகிஸ்தான் இலங்கைக்கு உடனடி நிவாரணங்களையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது.

ஏற்கனவே பாகிஸ்தான் விமானம் மூலமும் 200 டொன் உடன் நிவாரணப் பொருட்கள் கடல் மார்க்கமாக பாலங்கள், வள்ளங்கள், பிளங்கெட், கூடாரங்கள் பாய்கள் நுளம்பு வலைகள், பால் பெட்டிகள் மருந்துப் பொருட்களை உடனடி நிவாரணமாக வழங்கி வைத்தது.

அத்துடன் பாகிஸ்தான் இராணுவ குழு ஒன்றும் இவ் நிவாரணப் பணிகளில் இலங்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸும் கலந்து கொண்டார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...