புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

Date:

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதான வீதிகளில் 12,000 கிலோமீற்றர் தூரம் வரை கூகுள் வரைபடங்களில் நிகழ்நேரத் தகவல்கள் (Real-time information) புதுப்பிக்கப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் இதனை தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த முன்னெடுப்பின் மூலம் பயணிகள் தங்கள் பயணங்களை மிகவும் வினைத்திறனாகத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில், வீதித் தடங்கள் மூடப்படுதல் மற்றும் கட்டுமான அறிவிப்புகள் உள்ளிட்ட ஆறு வகையான நிலை எச்சரிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்தப் புதிய விசேட அம்சமானது பயண தாமதங்களைக் குறைக்கவும், வழித் திட்டமிடலை மேம்படுத்தவும் மற்றும் வீதியைப் பயன்படுத்துவோருக்கான எதிர்பாராத நெரிசலைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மைய புதுப்பித்தலை தங்கள் கூகுள் வரைபடச் செயலியைப் (App) பரிசோதித்து, பயணிக்கும் போது மேம்படுத்தப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன்

இத்திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒரு முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...