அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக, ஹஜ் குழுவிடமிருந்து ரூ.5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (08) முற்பகல் ரூ. 5 மில்லியன் நன்கொடையை புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஹஜ் குழு வழங்கியுள்ளது.
இந்த நன்கொடைக்கான காசோலையை ஹஜ் குழு தலைவர், பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லார், புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ஆகியோரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஹஜ் குழு உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
