ரயில் பருவச் சீட்டுக்களில் பஸ்களில் பயணிக்க வாய்ப்பு

Date:

நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி ரயில்வே மாதாந்த பருவச்சீட்டை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரயில் பயணத்திற்கான பருவச் சீட்டை  இ.போ.ச பஸ்களில் காட்டி தமது பயணத்தைத் தொடர முடியும் என   இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபையின் அதி சொகுசு பஸ்கள் தவிர்ந்த ஏனைய சாதாரண பஸ்களில் ரயில்வே மாதாந்த பருவச்சீட்டைப் பயன்படுத்தி போக்குவரத்து  நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை  மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு: நாடு முழுவதும் 18 புதிய கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் ஐந்தாவது பொதுவான புற்றுநோயான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அது...

விமல் வீரவன்ச கைது

இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த...