வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

Date:

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல், தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் களுத்துறையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...