பூட்டான் இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கர்மா ஹமு டோர்ஜி (H E Karma Hamu Dorjee) அவர்கள் அண்மைய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, பூட்டான் அரசாங்கத்தின் சார்பாக USD 200,000 (இரண்டு இலட்சம் அமெரிக்க டாலர்) நன்கொடையை நேற்றையதினம் அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.
பூட்டானிய மக்களின் இந்த ஒருமைப்பாட்டிற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புரீதியான உறவுகளுக்காகவும் அமைச்சர் விஜித ஹேரத் நன்றியினை தெரிவித்துள்ளார்.
