கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

Date:

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய (ஓட்டிசம்) மற்றும் நரம்பு விருத்தி அலகை விரிவாக்குதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.

2025 வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் ஓட்டிசம் உள்ளிட்ட நரம்பு விருத்தி இயலாமைக்குட்பட்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையத்தை கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்காக முன்னுரிமை வழங்குவதற்கு 2025-10-21 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூபா 398.09 மில்லியன்களாகும். உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்தவதற்கு தேவையான நிதி மத்திய கால வரவுசெலவு சட்டகத்திற்குள் ஏற்பாடு செய்து திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...