நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று (02) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இன்று) மாலை 5.00 மணிக்கு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எஸ். கே. ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாட்டின் தற்போதைய சூழ்நிலை, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
