துருக்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான இஸ்தான்புல்லின் சுல்தான் அஹ்மட் பிரதேசத்தின் மையத்தில் தனது கல்விப் பயணத்தை தொடங்கவுள்ளது “சர்வதேச இஸ்லாமிய அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம்”
இஸ்லாமிய ஷரீஆ கற்கைகளுடன் மானுடவியல், இயற்கை விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் முதலிய கற்கைகள் இணைந்த முழுமையான நாகரீகப் பார்வை கொண்டதாக அது அமையப் பெறவுள்ளது.
இதன் தலைவராக முன்னாள் சமய விவகாரங்களுக்கான தலைவர் பேராசிரியர் மொஹமட் கோர்மாஸை துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான் நியமித்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் 2026 செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இஸ்லாமிய உலகெங்குமிருந்து மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

