தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

Date:

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான கடுமையான ஆபத்து இருப்பதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டார்.

நாட்டைப் பாதித்த அண்மைய அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக, வரும் நாட்களில் கடுமையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளன.

அதன்படி, டெங்கு, சிக்குன்குனியா மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

மேலும், தொற்றாத நோய் நிலைகளில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

குறிப்பாக, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் சிகிச்சை இப்போது சீர்குலைந்துள்ளது.

 

பேரிடர் சூழ்நிலை காரணமாக அவர்களின் மருந்துகள் காணாமல் போயிருக்கலாம்.

எனவே, இந்த நோயாளிகளுக்கு நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றோம் – என்றார்.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...