பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ) என்ற நூலின் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழா எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விழாவை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
நிகழ்வு நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
