பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலையில் கல்வியைத் தொடர சந்தர்ப்பம்

Date:

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வியை தொடர முடியுமென, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாதெனத் தெரிவித்த அவர்,  இதற்கமைய கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தளர்வான கொள்கைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள ஊட்டச்சத்து திட்டமும் 16 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும்,அதை மேலும் விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேரிடருக்கு பிறகு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இதன்பிரகாரம் மேற்கு,தெற்கு, வடக்கு, கிழக்கு,சபரகமுவ மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்.

இருப்பினும்,மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 147 பாடசாலைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...