2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஜனவரியில்..!

Date:

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே கூறியுள்ளதாவது,

தற்போது தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படவிருந்த 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது இப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடர் நிலைமைக்கு உட்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதிருப்பின் தமது பாடசாலை அதிபருக்கு அறிவிக்க வேண்டும்.

அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமைக்கு உட்பட்டிருப்பின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் (பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறு) ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...