நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு உதவி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கடும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களுக்கு இலங்கை ஹஜ் பயண முகவர் சங்கம் நிவாரண நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. கம்பளை டவுன் ஜும்மா மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபைக்கு இந்நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 100 மெத்தைகள், கேஸ் குக்கர்கள், தலையணைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன.
நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் இலங்கை ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவரும், அம்ஜா ட்ரவல்ஸ் உரிமையாளருமான அல்ஹாஜ் எச்.எம். அம்ஜதீன் மற்றும் முன்னாள் செயலாளர் முகமது ஜசீம் ஆகியோர் கலந்து கொண்டு இந் நிவாரணப்பொருட்களை பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

