கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அனைத்து மூத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
இந்த பண்டிகை காலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸார் 2,500 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளது. மேலும் சில அதிகாரிகள் சிவில் உடையில் இருப்பார்கள்.
மேலும் இந்த பண்டிகை காலத்தில் உளவுத்துறை அதிகாரிகளும் பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கடமைகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
