கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

Date:

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அம்மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.

டிசெம்பர் 22ஆம் திகதி சபை வாக்கெடுப்பில் இந்த வரவு, செலவுத்திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வாசிப்புக்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வரவு, செலவுத்திட்டமானது மாநகர சபையின் செயற்றிறனையும் எதிர்வரும் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களையும் பிரதிபலிப்பதாகவும் கொழும்பு மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தையும் வளமான நகரையும் உருவாக்குவதே தமது இலக்காகத் தொடருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

2023/24 காலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை இல்லாமல் ஆணையாளர் முறையில் நிர்வாகம் நடந்ததால் வரவு, செலவுத்திட்ட தயாரிப்பு சிக்கலானதாக இருந்ததாகத் தெரிவித்த அவர், முன்னதாக புதிய சபை நியமிக்கப்பட்டு சில வாரங்களுக்குள் திட்டத் தயாரிப்பு தொடங்கப்பட்டு ஜூலை மாதத்தில் 16 மாநகர நிறுவனங்களிடமும் ஆளும் தரப்பு அவை அரசியல் பேதமின்றி அவை பொதுநலன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது. முதன்முறையாக மாநகர ஊழியர்களிடமிருந்தும் எழுத்து மூலமான முன்மொழிவுகள் பெறப்பட்டன.

நிதிச் சாத்தியக்கூறுகள் மற்றும் செலவுத் தேவைகள் குறித்து நவம்பர்வரை கலந்துரையாடல்கள் நடைபெற்றன.பின்னர் 23 நிலைக் குழுக்கள், நிதிக் குழுக்கள் ஆகியவற்றின் பரிசீலனையுடன் சட்டப்படி பொதுமக்கள் பார்வைக்காகவும் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...