
‘டித்வா’ சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசைத் தாக்கிய டித்வா சூறாவளி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து நாங்கள் அறிந்தோம்.
இந்த துயரத்தில் உங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உங்கள் நட்பு மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், உண்மையான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காணாமல் போனவர்கள் அவர்களது குடும்பங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்பவும், உங்களுக்கு மேலும் எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.
பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், குறிப்பிடுகையில்:
“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசைத் தாக்கிய டித்வா சூறாவளி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய செய்தி எனக்குக் கிடைத்தது.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், உங்கள் நட்பு மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், உண்மையான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காணாமல் போனவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்பவும், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது என்றும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
