சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மேலதிக விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, பாராளுமன்ற ஊழியர்கள் மீண்டும் டிசம்பர் 29 ஆம் திகதி திங்கட்கிழமையே தமது கடமைகளுக்கு திரும்பவுள்ளனர்.
