மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

Date:

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும் திறப்பதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் நீரின் அளவு குறைந்து வீதிகள் மீள் புனரமைக்கப்பட்டுள்ளமையால், குமன தேசியப் பூங்கா, ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா, மற்றும் யால தேசியப் பூங்காவின் V பிரிவு ஆகியன இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகின்றன என வனஜீவராசிகள் (பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மை) பணிப்பாளர் மஞ்சுள அமரரத்ன தெரிவித்துள்ளார்.

மரங்கள் முறிந்து விழும் ஆபத்துக்கள் இருப்பதால் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவெல மிருகக்காட்சி சாலை ஆகியவற்றின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

பின்னவெல யானைகள் சரணாலயம், ரிதியகம சஃபாரி பூங்கா ஆகியன திங்கட்கிழமை முதல் மீண்டும் பொதுமக்களின் பார்வையிடலுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிச் சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து பூங்காக்களும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...