அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

Date:

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான ஊடகவியலாளராக இக்பால் அத்தாஸ் திகழ்ந்ததாக அவரது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது நண்பரும், புகழ்பெற்ற ஊடகவியலாளரும், “சண்டே டைம்ஸ்” (“Sunday Times”)வார இதழின் முன்னாள் பாதுகாப்பு விவகாரப் பத்தி எழுத்தாளரும், ஆலோசக ஆசிரியருமான இக்பால் அத்தாஸ் இன்று (13)காலமான செய்தியை அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.

அத்துடன், அவர் ஜேம்ஸ் டபென்ஸ் வீக்லி (Jane’s Defence Weekly) சி என் என் (CNN ) மற்றும் டைம்ஸ் ஒப் லண்டன் (Times of London)ஆகியவற்றிற்கும் பங்களிப்பு செய்திருக்கின்றார்.

இக்பால் அத்தாஸ் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் எழுதிய தலை சிறந்த ஊடகவியலாளராக மதிக்கப்படுகிறார்.

குறிப்பாக, 30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு யுத்த காலத்தில் அவர் வழங்கிய போர்முனைச் செய்திகள் விறுவிறுப்பானவை. அவரது பல்வேறு சிறப்புச் செய்திகளும் அவைமீதான அன்னாரின் ஆழமான பார்வையயும் வாசகர்களை அறிவூட்டின.

அவர் தனது ஊடகப் பணியை 1980 ளில் எம்.டி.குணசேன “தவச” குழுமத்தின் தமிழ் வார இதழான “சிந்தாமணி” மற்றும் “சன்” பத்திரிகையில் செய்தியாளராக ஆரம்பித்தார்.பொதுநலனை முதன்மையாகக் கொண்டு, தேவையான சுய கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை என்பவற்றை பேணி, அர்ப்பணிப்பு, திட உறுதி மற்றும் பொறுப்புணர்வுடன் அவர் எழுதி வந்தார்.

அவருக்கும், எனக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் எப்போதும் சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தன. அவர் எளிதில் அணுகக்கூடியவராகவும், சக ஊடகவியலாளர்களின் கருத்துகளுக்கு எப்போதும் செவிசாய்ப்பவராகவும் இருந்தார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகைத்துறைக்காக அவர் கடைப்பிடித்த உயர்ந்த தரச் சிறப்புக்கும், அவர் காட்டிய துணிச்சலுக்கும் நன்றி தெரிவித்து, மரியாதை செலுத்துவது எமது கடமையாகும்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை அளிப்பானாக.

“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”. “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக அவனிடமே நாம் மீண்டும் திரும்புவோம்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...