‘தேசத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு’ குறித்த சிங்கள மொழியிலான ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று.

Date:

கலாநிதி ரவூப் ஸெய்ன் தமிழில் தயாரித்து வழங்கிய ‘இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு’ என்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு ‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’ என்ற பெயரில் கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டு அதன் வெளியீட்டு விழா  இன்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிறப்பு வாய்ந்த இவ்விழாவின் பிரதம அதிதியாக புத்தசாசன மற்றும் மத விவகார கலாசார அமைச்சர் கலாநிதி சுனில் செனவி கலந்துகொள்வதோடு பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹித திசாநாயக விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் பணிப்பாளர் திரு மஞ்சுல கஜநாயக விழாவை ஏற்பாடு செய்யும் பஹன மீடியாவின் 7 ஆண்டு நிறைவு குறித்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

பிரதி அமைச்சர்களான கமகெதர திசாநாயக்க, முனீர் முழப்பர், அர்க்கம் இல்யாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வமதத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...