தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்திற்கும் (Sri Lanka Planters’ Association) இடையில் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை தினசரி சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக 200 ரூபா வரவு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக (Attendance Allowance) வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையில், 2026 வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த ஜனாதிபதி, தோட்டத் தொழிலாளர்களின் தினசரிச் சம்பளத்தை 1,750 ரூபா வரை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்திருந்தார். இதற்கமைவாக, இந்தச் சம்பள உயர்வுக்கான செலவுகளை ஈடுகட்ட 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை...