இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

Date:

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ‍தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் வளைகுடா வான்வெளி மீது தங்கள் படைகளுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வரும் நிலையில், ஈரான் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இன்னமும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தச் சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன.

இரு இருக்கைகள் கொண்ட முதல் அமெரிக்க F-15E ரக விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இரண்டாவது விமானமான, A-10 வார்ஹொக் (Warthog) ரகப் போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகி குவைத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், விமானி வெளியே குதித்ததாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் குறித்த விமானங்கள் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானக் குழுவினருக்கு ஏற்பட்ட காயங்களின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், காணாமல் போன F-15E விமானக் குழு உறுப்பினரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

ஈரானின் தென்மேற்குப் பகுதியில் எதிரியின் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாங்கள் சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

அதேநேரம், எதிரியின் படைகளை பிடிப்பவர்கள் அல்லது அவர்களை கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என்று பிராந்திய ஆளுநர் உறுதியளித்தார்.

Popular

More like this
Related

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...