பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம் பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில்  நடைபெறும்.

அதன், ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

புனித சின்னங்களை பெப்ரவரி 04 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து, ஹுனுபிட்டி கங்காராம விஹாரையில் பொது மக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கும்.

 

பெப்ரவரி 04 ஆம் திகதி இந்தியாவிலிருந்து புனித சின்னங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அவை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு செல்லப்படும் வரை தேவையான வசதிகள், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் அவை தொடர்பான திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் கொழும்புக்கு வருகை தருவதால் அவர்களுக்குத்  தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர் தெரிவித்தார்.

புனித சின்னங்களை வழிபடுவதற்காக கங்காராம விகாரை வளாகம் எவ்வாறு தயார்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தேரர் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

இது, இலங்கை மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் என்றும், நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கும் திட்டத்தில் ஒரு தனித்துவமான வாய்ப்பு என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்தார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...