இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று (01) முதல் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வசதியை வழங்குவதற்காக ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
சிசு செரிய, கெமி செரிய மற்றும் நிசி செரிய ஆகிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட 3,300 மில்லியன் ரூபாவிற்கு மேலதிகமாகவே, இந்தப் புதிய பஸ் சேவைகளுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
