அவரது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனது நண்பரும், புகழ்பெற்ற ஊடகவியலாளரும், “சண்டே டைம்ஸ்” (“Sunday Times”)வார இதழின் முன்னாள் பாதுகாப்பு விவகாரப் பத்தி எழுத்தாளரும், ஆலோசக ஆசிரியருமான இக்பால் அத்தாஸ் இன்று (13)காலமான செய்தியை அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.
அத்துடன், அவர் ஜேம்ஸ் டபென்ஸ் வீக்லி (Jane’s Defence Weekly) சி என் என் (CNN ) மற்றும் டைம்ஸ் ஒப் லண்டன் (Times of London)ஆகியவற்றிற்கும் பங்களிப்பு செய்திருக்கின்றார்.
இக்பால் அத்தாஸ் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் எழுதிய தலை சிறந்த ஊடகவியலாளராக மதிக்கப்படுகிறார்.
குறிப்பாக, 30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு யுத்த காலத்தில் அவர் வழங்கிய போர்முனைச் செய்திகள் விறுவிறுப்பானவை. அவரது பல்வேறு சிறப்புச் செய்திகளும் அவைமீதான அன்னாரின் ஆழமான பார்வையயும் வாசகர்களை அறிவூட்டின.
அவர் தனது ஊடகப் பணியை 1980 ளில் எம்.டி.குணசேன “தவச” குழுமத்தின் தமிழ் வார இதழான “சிந்தாமணி” மற்றும் “சன்” பத்திரிகையில் செய்தியாளராக ஆரம்பித்தார்.பொதுநலனை முதன்மையாகக் கொண்டு, தேவையான சுய கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை என்பவற்றை பேணி, அர்ப்பணிப்பு, திட உறுதி மற்றும் பொறுப்புணர்வுடன் அவர் எழுதி வந்தார்.
அவருக்கும், எனக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் எப்போதும் சுவாரஸ்யமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தன. அவர் எளிதில் அணுகக்கூடியவராகவும், சக ஊடகவியலாளர்களின் கருத்துகளுக்கு எப்போதும் செவிசாய்ப்பவராகவும் இருந்தார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகைத்துறைக்காக அவர் கடைப்பிடித்த உயர்ந்த தரச் சிறப்புக்கும், அவர் காட்டிய துணிச்சலுக்கும் நன்றி தெரிவித்து, மரியாதை செலுத்துவது எமது கடமையாகும்.
அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸுல் அஃலா என்ற உன்னதமான சுவன பாக்கியத்தை அளிப்பானாக.
