மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ”இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்” என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 4.15 மணி முதல் 6.15 மணி வரை நடைபெறவுள்ளது.
உஸ்தாஸ் எம்.ஏ.எம். மன்சூர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.ஜே.எம். அரபாத் கரீம் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ள இவ்விழாவுக்கு மேன்முறையீட்டு நீதிபதி கௌரவ ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமை தாங்கவுள்ளார்.

