கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
தமது தங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தம், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பண்டிகைக் காலத்தில் மீளப் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
