நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Date:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

 

திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

 

அத்துடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்.

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...