நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

Date:

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை வெள்ளிக்கிழமையிலிருந்து (23) மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

 

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும் மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கரையயோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கி.மீ. வேகம்  வரை அதிகரிக்கலாம்.

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து  பொத்துவில் வரையிலுமான கரையயோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரணம் முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கக்கூடும் : ஐ.நா சபை எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait...

ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் சடலங்களை ஒப்படைக்கத் தயார்: அமைச்சரவைப் பேச்சாளர்

அமெரிக்காவின் தாக்குதலால் விபத்துக்குள்ளான IRIS DENA கப்பலிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை ஒப்படைக்குமாறு...