தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (09) நண்பகல் 12:00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
எச்சரிக்கை மட்டம் 1 (Level 1):
பதுளை மாவட்டம்: பதுளை, ஹாலிஎல, பஸ்ஸறை, லுணுகலை, வெலிமடை, மீகஹகிவுல, கந்தகெட்டிய மற்றும் ஊவா பரணகம.
மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை.
நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த மற்றும் மதுரட்ட.
எச்சரிக்கை மட்டம் 2 (Level 2):
கண்டி மாவட்டம்: உடதும்பர.
நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை.
மாத்தளை மாவட்டம்: வில்கமுவ.
