ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

Date:

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று (05) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அமைச்சரவை அமைச்சராகப் பதவி வகித்தவர் என்ற அடிப்படையில், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே அவர் இன்று காலை விசாரணை அதிகாரிகளுக்கு முன்னால் முன்னிலையாகியுள்ளார்.

Popular

More like this
Related

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...