49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

Date:

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 49 ஆவது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8  ஆம் திகதி தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் புத்தகக் கண்காட்சி,  ஜனவரி 21  ஆம் திகதி நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை நந்தனம் திடலில் மிகப் பெரிய அளவில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழிக்காக 428 அரங்குகளும், ஆங்கில மொழிக்காக 256 அரங்குகளும், பொது அரங்குகள் 24 உள்பட 1,000 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. ஜப்பான் மொழி நூல்களுக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்தும் வாசிப்பு பழக்கத்தின் அவசியம் குறித்தும் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

நந்தனம் YMCA மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சி, கடந்த ஆண்டுகளை விட விரிவான அளவில் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள நூல்கள், கல்வி சார்ந்த புத்தகங்கள், இலக்கிய படைப்புகள், குழந்தைகளுக்கான நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி புத்தகங்கள் என பல்வேறு வகையான புத்தகங்கள் ஒரே இடத்தில் வாசகர்களுக்காகக் கிடைக்கப்பெறும்.

மேலும், நடப்பாண்டில் முதன்முறையாக புத்தகக் கண்காட்சிக்கு பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அனைத்து தரப்பு மக்களும் எந்த தடையுமின்றி கண்காட்சியை பார்வையிட முடியும்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களை எளிதாக வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தகக் கண்காட்சியின் இன்னொரு சிறப்பம்சமாக, தினமும் மாலை நேரங்களில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் கலந்துகொண்டு சிறப்புரைகள் நிகழ்த்துவார்கள்.

இந்நிகழ்வுகளில் இலக்கியம், சமூக மாற்றம், அரசியல் சிந்தனை, அறிவியல் வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

இதன் மூலம் வாசகர்கள் புத்தகங்களை வாங்குவதுடன் மட்டுமல்லாமல், அறிவுசார் உரையாடல்களிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...