2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில் 2026ம் ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான முதலாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.01.12ம் திகதி முதல் 2026.01.25ம் திகதி வரையில் நிகழ்நிலை முறைமையூடாக (Online) சமர்ப்பிக்க முடியுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசித்து 3 பாடசாலைகளுக்கு (ஆகக் கூடியது) மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் http://g6application.moe.gov.lk/#/ எனும் இணைப்பினூடாக நேரடியாக மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கவும் முடியும்.
