நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

Date:

இன்றையதினம் (20) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும் மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையயோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45-50 கி.மீ. வேகம்  வரை அதிகரிக்கலாம்.

மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையயோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...