அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைப்பதற்காக உறுதியான பிணைப்பை உருவாக்குவோம் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
மதஸ்தலங்களை புனரமைப்பு செய்து மீண்டும் மக்கள் தமது வழிபாடுகளை முன்னெடுக்கும் வகையில் புத்தசாசன , மத விவகார அமைச்சினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாளைய தினம் காலை 10.00 மணிக்கு கம்பளை தொரகல பீகோன் ஹில் குடியிருப்பு பகுதியிலுள்ள ஸ்ரீ போதிருக்பராமா விகாரையில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
