நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடக பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்திலிருந்து நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் காற்றின் தரம் 150க்கும் 200க்குமிடையிலான தரத்தில் காணப்படுகிறது.
சர்வதேச எல்லையில் காணற்றும் காற்று சுழற்சி காரணமாக இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரு நாட்களுக்கு குறித்த நிலையில் மாற்றம் ஏற்படலாம். காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நோய்வாய்ப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. சுவாச பிரச்சினை, ஒவ்வாமை போன்ற நோய் நிலைமைகள் ஏற்படாமென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
