விளையாட்டு கலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கில் (2025-2027), விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான விளையாட்டுத் தொகுதிகளின் நிர்வாகத்தை முறைமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு விளையாட்டுத் தொகுதிக்கும் தன்னார்வமாகச் செயற்படக்கூடிய ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட முகாமைத்துவ சபையொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
