ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளில் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை!

Date:

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இணையதளமான Tripadvisor வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான “Travelers’ Choice Awards Best of the Best” தரவரிசையின்படி, ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகளுக்குள் இலங்கையின் மிரிஸ்ஸ மற்றும் பெந்தோட்டை கடற்கரைகள் இடம்பிடித்துள்ளன.

இந்த கௌரவமான பட்டியலில் மிரிஸ்ஸ கடற்கரை 05ஆவது இடத்தையும், பெந்தோட்டை கடற்கரை 07ஆவது இடத்தையும் வென்று சாதனை படைத்துள்ளன.

சுற்றுலாத்துறையில் மிக உயர்ந்த தரத்தைப் பேணும் இடங்களுக்கே இந்த “Best of the Best” விருது வழங்கப்படுவதாக Tripadvisor தெரிவித்துள்ளது. கடந்த 12 மாத காலப்பகுதியில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வழங்கிய பெருமளவிலான கருத்துக்கணிப்புகள்  மற்றும் அவர்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே இந்தத் தரவரிசை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள மிரிஸ்ஸ, அதன் இயற்கை அழகு மற்றும் அமைதியான கடல் அலைகளுக்காகப் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்பிங்  விளையாட்டுக்கு புகழ்பெற்ற ‘Mirissa Right’ பகுதி மற்றும் ‘Coconut Tree Hill’ பகுதியில் காணப்படும் சூரிய அஸ்தமனக் காட்சி சுற்றுலாப் பயணிகளால் அதிகம் சிலாகிக்கப்பட்டுள்ளது.

இது நீர் விளையாட்டுகளுக்கான உலகப் புகழ்பெற்ற இடமாகும். ஜெட் ஸ்கீ   கைட் சர்பிங் வசதிகள் மற்றும் அங்குள்ள பரந்த வெள்ளை மணற்பரப்பு என்பன பயணிகளின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளன.

2026 ஆசியாவின் சிறந்த 10 கடற்கரைகள்: முழு விவரம்

தரவரிசை கடற்கரை நாடு
01 பனானா கடற்கரை தாய்லாந்து
02 கெலிங்கிங் கடற்கரை இந்தோனேசியா
03 ராதாநகர் கடற்கரை இந்தியா
04 பாலோலம் கடற்கரை இந்தியா
05 மிரிஸ்ஸ கடற்கரை இலங்கை
06 வைட் பீச் பிலிப்பைன்ஸ்
07 பெந்தோட்டை கடற்கரை இலங்கை
08 ரைலே கடற்கரை தாய்லாந்து
09 நுசா துவா கடற்கரை இந்தோனேசியா
10 செனாங் கடற்கரை மலேசியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு...

துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன்...

வரி விதிப்பு: உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின்...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல...