ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Date:

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI)  உலகளாவிய ரீதியில் இலங்கை 14 நாடுகளைக் கடந்த முன்னேறியுள்ளது.

CPI தரவுக்கமைய இலங்கை கடந்த 2024ம் ஆண்டு 121வது இடத்தில் இருந்த நிலையில் 2025ம் ஆண்டு 107வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 3 வீத வளர்ச்சியாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் 180 நாடுகளில் இலங்கை 107வது இடத்தில் காணப்படுகிறது.

CPI என்பது உலகில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பூகோள ஊழல் தரப்படுத்தல் கணிப்பாகும். ஒவ்வொரு நாடுகளினதும் அரசுகள் எத்தகைய ஊழல் நிறைந்தவை என இது மதிப்பிடுகிறது.

2024ம் ஆண்டில் இலங்கை மிகவும் மோசமான நிலையான 121வது இடத்திற்கு வந்ததுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 180 நாடுகளில் ஊழல் அதிகம் நிறைந்ததாக 3வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை தொடர்ச்சியாக 8வது தடவையாகவும் டென்மார்க் குறித்த பட்டியலில் 89வது இடத்திலுள்ளது. பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உயர் நிலையிலுள்ளன.

மிகவும் குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகளில் தென் சூடான், சோமாலியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் உள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...