எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

Date:

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை, விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தினால் மற்றும் அதன் ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை ஆரம்பகட்ட பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எவன்கார்ட் நிறுவனம் நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த கடல்சார் பாதுகாப்பு சேவைகளை, இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார். எவன்கார்ட் நிறுவனத்தின் இந்தச் செயற்பாடுகளினால் நாட்டிற்குப் பாரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு அந்தப் பொறுப்பை கடற்படையிடம் ஒப்படைத்தார்.

இதன் விளைவாக, இதுவரை தனிப்பட்ட நிறுவனமொன்றிற்குச் சென்றுகொண்டிருந்த பாரிய டொலர் வருமானம், தற்போது முழுமையாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறுகிறது. புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் இந்த வணிகத்தை எவன்கார்ட் நிறுவனத்திடமிருந்து நீக்கி மீண்டும் கடற்படையிடம் ஒப்படைத்தது.

இதன்படி, சுதந்திரமான கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், வெறும் நான்கு மாத காலப்பகுதிக்குள் 598,250 அமெரிக்க டொலர்களை உழைக்க இலங்கை கடற்படைக்கு முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...