கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபரிடமும், தனியார் விண்ணப்பதாரிகள் கிராம சேவகரிடமும் அந்தப் புகைப்படங்களில் கையொப்பம் பெற்று சான்றுப்படுத்த வேண்டும்.

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து மூன்று மாதங்களுக்குள் அதன் பெறுபேறுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இதன்போது அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...