காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

Date:

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகபர் அந்நாட்டிலிருந்து இன்று (27) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல பாதாளக் குழு உறுப்பினரும் சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியுமான ‘பொடி லெஸி’ என அழைக்கப்படும் ஆருமாஹந்தி ஜனித் மதுசங்க இந்தியாவிலிருந்து இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை, இந்தியா சென்ற விசேட பொலிஸ் குழுவினரால், இன்று (27) அதிகாலை 5.55 மணிக்கு மும்பையில் இருந்து வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 142 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபருமான ‘பொடி லெஸி’ எனப்படும் ஜனித் மதுசங்க, 2024 டிசம்பர் 09ஆம் திகதி நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...